இந்திய இலக்கியச் சிற்பிகள் கா. மீனாட்சிசுந்தரம்

Wait 5 sec.

இந்திய இலக்கியச் சிற்பிகள் கா. மீனாட்சிசுந்தரம்- சிற்பி பாலசுப்பிரமணியம்; பக். 128; ரூ. 100; சாகித்திய அகாதெமி, சென்னை- 600 018. ✆ 044-2431 1741.சாகித்திய அகாதெமியில் பத்தாண்டுகள் தமிழ்க் குழுவில் உறுப்பினராக இருந்த கா. மீனாட்சிசுந்தரத்துக்கு நூற்றாண்டு விழா நடத்தி இந்த நூலை வெளியிட்டுள்ளதாக நூல் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.இந்த நூலில் பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால், தலைமுறைகளை வளர்த்த ஆசிரியம், ஆளுமைத் திறன், பாரதி ஆய்வில் முன்னோடி, கள ஆய்வில் விளைந்த கனி, சிலம்பில் தோய்ந்த நெஞ்சம், மனதைக் கவர்ந்த மனோன்மணீயம், இலக்கியப் பன்முகம், அறிவியல் ஈடுபாடும் மொழிபெயர்ப்பும் என 9 தலைப்புகளில் கா. மீனாட்சிசுந்தரனாரின் இலக்கிய ஆளுமை, நல்லாசிரியராக, நாடு போற்றும் நிர்வாகியாக, இலக்கியப் பேரொளியாக விளங்கிய பாங்கு ஆகியவற்றை வெளிப்படுத்தியுள்ளார்.பல்கலைக்கழகத் தேர்வில் முதன்மை, கவிதைகளை ஆராய்வதில் முதன்மை, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை ஏற்பதில் முதன்மை, கல்லூரிக் கல்வி இயக்குநராகப் பொறுப்பேற்ற முதல் தமிழ்ப் பேராசிரியர் என்ற முதன்மை என முதன்மைகளால் செழித்த வாழ்க்கை கா.மீனாட்சிசுந்தரத்தினுடையது.வாழ்நாள் முழுவதும் கற்பித்து உருவாக்கிய மாணவர் பரம்பரையுடன் தாமும் கற்றுக் கொண்டே இருந்த தெ.பொ.மீ., மு.வ., ஒüவை துரைசாமி பிள்ளை, ஆ. சிதம்பரநாதனார் முதலிய பேராசிரியப் பெருமக்கள் பரம்பரையில், அடுத்து தோன்றி அரிய மாணவச் செல்வங்களை உருவாக்கிய சிறப்புக்குரியவர் கா. மீனாட்சிசுந்தரம்.கா. மீனாட்சிசுந்தரத்தின் பல்வேறு ஆய்வுக் கோணங்கள், சொல் ஆராய்ச்சிகள், உரைநடைப் பங்களிப்பு, பல்துறைப் பார்வை என விரிந்துள்ளது.பின்னிணைப்பாக அவரது படைப்புகள் காலவரிசைப்படி தரப்பட்டுள்ளன. நூல் வடிவம் பெறாத கட்டுரைகள் பட்டியல் உள்ளது. பெற்ற சிறப்புகள்/விருதுகள் தரப்பட்டுள்ளன.