பேரவையில் விதி எண் 55, 56ன் கீழ் அறிவிப்புகள் அனுமதிக்கப்படுவதற்கு முன் சமூக வலைத்தளங்கள், ஊடகங்களில் வெளியிட அனுமதிக்க முடியாது என்று பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.தமிழக சட்டப்பேரவையில் அவைத்தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் பேசுகையில், பேரவைக்கு ஒரு அறிவிப்பை வெளியிட நான் விரும்புகிறேன். சட்டப்பேரவை விதி எண் 55, 56 போன்ற அறிவிப்புகள் பேரவையின் செயலர் அல்லது பேரவைத் தலைவர் அனுமதித்து பிறகு விவாதிக்கலாம். ஆனால், சில உறுப்பினர்கள் பெயரை இங்கு நான் குறிப்பிட விரும்பவில்லை. அறிவிப்புகளை எழுதி உடனடியாக யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களுக்குக் கொடுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.பேரவை உறுப்பினர்கள் தங்களது தனிப்பட்ட பெயரில் உள்ள சமூக வலைத்தளத்தில் அவற்றை வெளியிடுகிறார்கள். பேரவைத் தலைவரை அனுமதிக்கப்படும் வரை அவற்றை வெளியிடுவது விதிகளுக்கு முரணானது. அது குறித்து பேரவை விதி எண் 36 உள்பிரிவு 5 தெளிவாகக் குறிப்பிடுகிறது. அதன்படி, பேரவைத் தலைவர் அனுமதித்து உறுப்பினர்களுக்கு அனுப்பாத வரை அதனை உறுப்பினரோ, வேறு யாரும் வெளியிடக் கூடாது. எனவே இன்று முதல் தொலைக்காட்சி, ஊடகங்கள் உள்பட அனைத்துக்கும் சேர்த்தே சொல்கிறேன், அவ்வாறு இதில் பேரவை உறுப்பினர்கள் யாராவது இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டால் பிரசுரிக்கவும் கூடாது, வெளியிடவும் கூடாது.எனவே அனைவரும் பேரவை விதிக்கு உள்பட்டு நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அறிவுறுத்தியிருக்கிறார். கட்டணமில்லா வெற்றி பயணம் திட்டம்! பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!Did not wish to disclose the name... Speaker's directive! Why? For what reason?