சிறை, ஹபீபி படங்களுக்கு சிறந்த விருதுகள் வழங்குக: சட்டப்பேரவையில் தமிமுன் அன்சாரி கோரிக்கை

Wait 5 sec.

சிறை, ஹபீபி திரைப்படங்களுக்கு சிறந்த விருதுகள் வழங்கப்பட வேண்டும் என சட்டப்பேரவையில் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், சமூகநீதித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி பேசியதாவது, "தமிழகத்தில் சிறந்த திரைப்படங்களைத் தேர்வு செய்து, விருது வழங்கும் கலாசாரம் இருந்து வருகிறது. அதன் அடிப்படையில் சிறை மற்றும் ஹபீபி ஆகிய திரைப்படங்களுக்கு சிறந்த விருதுகள் வழங்க தமிழக அரசு ஆவணம் செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.சிறை : சந்தர்ப்ப சூழ்நிலையால் சிறைக்குள் 5 ஆண்டுகளாக விசாரணைக் கைதியாக இருக்கும் அப்துல் ரௌஃப் என்பவரை சுற்றிய கதையாக அமைந்திருக்கும் சிறை திரைப்படம், எளிய மக்கள் அதிகாரங்களால் அடக்கப்படும்போது, கிடைக்கும் சிறிய அதிகாரத்தைக் கொண்டு அவர்களின் வாழ்க்கையை மாற்றலாம் என்பதை காட்டியிருக்கும்.அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கிய சிறை படத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு, எல்கே அக்‌ஷய் குமார்,  அனிஷ்மா அனில்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.ஹபீபி : கடையநல்லூர் பகுதியில் மூன்றாம் தலைமுறையாக நெசவுத் தொழில் மேற்கொண்டு வரும் யூசுப் (கஸ்தூரி ராஜா) மற்றும் அவரது குடும்பத்தைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளே ஹபீபி திரைப்படம்.பயங்கரவாதிகள் எனும் அடைமொழிகளுக்குள் சிறை வைக்கப்பட்ட மக்களின் மனங்கள் எந்தளவு அன்பு நிறைந்தது என்பதை பேச துணிந்திருப்பது இந்தப் படத்தை கொண்டாடப் போதுமான காரணம்.பாலியல் வன்கொடுமை, போலியான வாக்குறுதிகள்... துல்கர் சல்மான் பட இயக்குநர் கைது! Movies Sirai and Habeebi deserve top awards, says Thamimun Ansari MLA