ஓணம் கொண்டாட்டத்தையொட்டி நடிகை அசின் பகிர்ந்த தனது மகளின் அரிதான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.கேரளத்தைச் சேர்ந்த நடிகை அசின் தமிழில் எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் நடித்து மிகவும் புகழ்பெற்றார். பின்னர், நடிகர்கள் விஜய் - அஜித்துடன் நடித்திருக்கிறார். குறிப்பாக, தமிழ்நாட்டின் தற்போதைய முதல்வராக இருக்கும் விஜய்யுடன் சிவகாசி, போக்கிரி, காவலன் என ஹாட்ரிக் வெற்றிகளைக் கொடுத்துள்ளார்.ராகுல் சர்மா என்பவரை கடந்த 2016ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு2017ல் ஒரு மகள் பிறந்தார். அவரது பெயர் அரின். 8 வயதாகும் இந்த மகளின் புகைப்படத்தை நீண்ட காலத்துக்குப் பிறகு நடிகை அசின் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தனது சொந்த ஊரில் குடும்பத்தினருடன் ஓணம் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அசின் அந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் மஞ்சள் நிற ஆடையுடன் அசினின் மகள் பூக்களை அடுக்கும் காட்சிகள் க்யூட்டாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். திருமணத்துக்குப் பிறகு அசின் நடிப்பில் இருந்து விலகியுள்ளார். பொதுவெளியில் திரைப்பட விளம்பரங்களில் கலந்துகொள்வதிலும் தவிர்த்து வருகிறார். கடைசியாக தமிழில் காவலன் படத்திலும் ஆல் இஸ் வெல் என்ற ஹிந்திப் படத்திலும் நடித்திருந்தார்.Actress Asin's Daughter Onam celebration pic.twitter.com/zOelo3wvfH— Sai • சாய் (@SaiAnvii) August 26, 2026பாலியல் வன்கொடுமை, போலியான வாக்குறுதிகள்... துல்கர் சல்மான் பட இயக்குநர் கைது! 'Ghajini' actor Asin shares rare pics of daughter Arin making Onam Pookalam