இந்தியா - பனாமா அணிகள் மோதும் நட்புறவு கால்பந்து போட்டி பெங்களூரில் நடைபெறும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கால்பந்து போட்டியை ஊக்குவிக்கும் நோக்கில் வெளிநாட்டு அணிகள் இந்தியாவுக்கு வந்து நட்புறவுப் போட்டிகளில் விளையாடி வருகின்றன. இந்த நிலையில், இந்தியா - பனாமா அணிகள் வருகிற செப். 26 ஆம் தேதி பெங்களூரில் உள்ள ஸ்ரீகாண்டீவரா கால்பந்து திடலில் மோதவிருக்கின்றன. இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.2026 ஆம் ஆண்டு ஃபிஃபா உலகக் கோப்பையிலும் பங்கேற்ற உலகத் தரவரிசையில் 44-வது இடத்திலிருக்கும் பனாமா அணி, இந்தியாவை எதிர்கொள்ளவிருப்பதால், இந்தப் போட்டிக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இந்தியா - பனாமா அணிகள் மோதும் போட்டியை அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் துணைத் தலைவரும், கர்நாடக கால்பந்து சங்கத்தின் தலைவருமான என்.ஏ. ஹாரிஸ் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தியா - பனாமா போட்டியைத் தொடர்ந்து அக். 3 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் போட்டியில் ஐந்து முறை உலக சாம்பியனான பிரேசிலை இந்திய அணி எதிர்கொள்ளவிருக்கிறது. 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் குவைத் அணியை வீழ்த்திய இந்திய அணி, இதே ஸ்ரீ காண்டீவரா திடலில் எதிர்கொள்ளவிருப்பதால், போட்டிக்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்திருக்கிறது. Bengaluru will host India's September 26 friendly against Panama at the Sree Kanteerava Stadium. The venue confirmation adds another major fixture to India's build-up for their October 3 clash against Brazil in Kolkata.