இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சோனல் தினுஷா அவரது வெற்றிக்கான ரகசியத்தைப் பகிர்ந்துள்ளார்.இந்தியா - இலங்கை இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி டிராவில் முடிந்தது. இதனால், இந்திய அணி 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றது.இந்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணியின் இளம் வீரர் சோனல் தினுஷா மிகவும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்தத் தொடரில் மட்டும் அவர் மூன்று சதங்களை விளாசி அசத்தினார். இரண்டாவது டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் சதம் விளாசியதுடன், ஆட்டத்தை டிராவில் முடிக்க மிகவும் உதவினார். சிறப்பாக விளையாடிய அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குத் தயாரானது குறித்து சோனல் தினுஷா மனம் திறந்துள்ளார்.தனது வெற்றிக்கான ரகசியம் குறித்து போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: இந்தியாவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் நான் அதிக ரன்கள் குவிக்க உதவியாக இருந்தவர்களைக் இங்கு குறிப்பிட வேண்டும் என நினைக்கிறேன். அதிலும் குறிப்பாக, எங்களது பயிற்சியாளர்கள் குழுவை இங்கு நான் குறிப்பிட விரும்புகிறேன். அவர்கள் எனக்கு ஊக்கமளித்தார்கள். என்னுடைய இளமைப் பருவ பயிற்சியாளர்கள், என்னுடைய குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்கள் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். இவர்கள் அனைவரும் எனக்கு நிறைய உதவிகளைச் செய்துள்ளார்கள்.ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு உகந்ததாக இருக்கும் எனத் தெரிந்தது. அதனால், சுழற்பந்துவீச்சுக்கு எதிராக நிறைய பயிற்சி மேற்கொண்டேன். அதுவே நான் அதிக ரன்கள் குவிக்க காரணமாக அமைந்தது. இரண்டாவது டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் பின்வரிசை ஆட்டக்காரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள். அவர்கள் நன்றாக விளையாடியது நான் ரன்கள் குவிக்க உதவியாக இருந்தது. சூழ்நிலையைப் புரிந்துகொண்டு என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக விளையாட முயற்சித்தேன்.இலங்கை அணிக்காக இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் மூன்று சதங்கள் விளாசியது உண்மையில் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அணிக்கு தேவையான நேரத்தில் நான் அதிகம் ரன்கள் குவிக்க வேண்டும் என நினைக்கிறேன். அணிக்காக ரன்கள் குவிப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இந்திய அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்தது ஒரு இளம் வீரராக மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 100 ரன்கள் மற்றும் 84 ரன்கள் குவித்த சோனல் தினுஷா, இரண்டாவது டெஸ்ட்டில் 103 ரன்கள் மற்றும் 133* ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.Sonal Dinusha, who delivered a stellar performance in the Test series against India, has shared the secret behind his success.ஆஸி.க்கு எதிரான யு-19 இந்திய அணியில் இடம்பிடித்த டிராவிட், சேவாக் மகன்கள்!