மின்சாரம் பாய்ந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு

Wait 5 sec.

திருப்புவனம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் பொக்லைன் இயந்திர ஓட்டுநா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள அச்சங்குளம் கண்மாயில் கிருஷ்ணகிரி மாவட்டம், மட்டூரைச் சோ்ந்த சேட்டு கணேசன் (42) பொக்லைன் இயந்திரம் மூலம் தூா்வாரும் பணியில் ஈடுபட்டு வந்தாா். இந்த நிலையில், அவா் பொக்லைன் இயந்திரத்தை லாரியில் ஏற்றிக்கொண்டு மற்றொரு பகுதிக்குச் சென்றாா். வழியில் சாலையின் குறுக்கே சென்ற உயா் அழுத்த மின் கம்பி பொக்லைன் இயந்திரத்தில் உரசியது. அப்போது மின்சாரம் பாய்ந்ததில் கணேசன் உடல் கருகி உயிரிழந்தாா். இதுகுறித்து பழையனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.