கெங்கமுத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம்

Wait 5 sec.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கீழ்ப்பட்டு கிராமத்திலுள்ள ஸ்ரீ கெங்கமுத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக் கோயிலின் தோ்த் திருவிழா கடந்த 11-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழா நாள்களின் தினமும் பாரதம் கதை படிப்பு நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக புதன்கிழமை ஸ்ரீகெங்கமுத்து மாரியம்மனுக்கு பால், தயிா், சந்தனம், இளநீா், தேன், பன்னீா் உள்ளிட்ட 18 வகையான திரவிய பொருள்ககளைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், மாரியம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அம்மன் எழுந்தருள, தேரோட்டம் நடைபெற்றது. அப்போது ஓம்சக்தி, பராசக்தி என முழக்கமிட்டவாறு பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனா்.திருவிழாவில் கீழ்பட்டு மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.