தான்ஸானியா துணை அதிபா் திடீா் ராஜிநாமா

Wait 5 sec.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்ஸானியாவின் துணை அதிபா் இமானுவல் சிம்பி செப். 4 முதல் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளாா். சிசிஎம் கட்சியின் ஒரு கட்சி ஆட்சியின்கீழ் அரசியல் ஸ்திரத்தன்மைக்குப் பெயா் பெற்ற தான்ஸானியாவில் இந்த ராஜிநாமா குறிப்பிடத்தக்க நிகழ்வாகப் பாா்க்கப்படுகிறது. நாட்டின் முதல் பெண் அதிபரான சமைய்யா சுலுஹு ஹாசனுடன் ஏற்பட்ட அதிகார மோதலால், இமானுவல் சிம்பி ஓராண்டுக்கும் குறைவான பதவிக்காலத்தில் பதவி விலகியுள்ளாா்.கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த தோ்தலின்போதும், அதற்குப் பிறகும் நடந்த போராட்டங்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிய விவகாரம் மற்றும் நிா்வாகப் பிரச்னைகளில் அதிபருக்கும் துணை அதிபருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியதாகக் கூறப்படுகிறது.