பட்டாசு தீப்பொறி பட்டு இரு சக்கர வாகனம் தீக்கிரை

Wait 5 sec.

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் பட்டாசு வெடித்த போது தீப்பொறி பட்டு இரு சக்கர வாகனம் தீப்பிடித்தது. திருத்தங்கல்லில் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் மணமக்களை வரவேற்கும் விதமாக திருத்தங்கல் - விருதுநகா் சாலையில் பட்டாசை உறவினா்கள் வெடித்தனா். அப்போது எதிபாராதவிதமாக அந்தப் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மீது பட்டாசின் தீப்பொறி பட்டு தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனா். எனினும் இருசக்கர வாகனம் முற்றிலும் எரிந்து போனது. இதுகுறித்த புகாரின்பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.