மோகன் பாகவத் நியூயார்க் நிகழ்ச்சி! ஒருங்கிணைப்பாளரின் எக்ஸ் கணக்கு முடக்கம்!

Wait 5 sec.

நியூயார்க்கில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பங்கேற்கும் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் அமைப்பின் எக்ஸ் கணக்கு முடக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு கடந்த ஆக.25 ஆம் தேதி முதல் பயணம் மேற்கொண்டுள்ளார். இதில், வரும் ஆக. 29 ஆம் தேதி நியூயார்க்கின் மேடிசன் சதுக்கத்தில் நடைபெறும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில் மோகன் பாகவத் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியை, அமெரிக்கன் ஹிந்தூஸ் ஃபார் எங்கேஜ்மெண்ட் அண்ட் டையலாக் (அஹெட்) எனும் அமைப்பு ஒருங்கிணைத்து நடத்துகின்றது. இந்த நிகழ்ச்சி குறித்து, அந்த அமைப்பு அவர்களின் எக்ஸ் தளப் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்ததது. இந்த நிலையில், அஹெட் அமைப்பின் எக்ஸ் கணக்கு இன்று (ஆக. 27) முடக்கப்பட்டதாகவும்; பின்னர், பல மணிநேரம் கழித்து மீட்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸ் தளத்தின் அல்காரிதத்தை தவறாகப் பயன்படுத்தி சிலர் தங்களின் கணக்கை முடக்க முயன்றதாக, அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. முன்னதாக, மோகன் பாகவத் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு நியூயார்க் நகர மேயரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ஸோரான் மம்தானி மற்றும் ஹிந்தூஸ் ஃபார் ஹியூமன் ரைட்ஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.குவைத் உடன் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம்! வளைகுடா நாடுகளுடன் அணிசேரும் பாகிஸ்தான்!X account of the organization coordinating the event in New York, in which RSS chief Mohan Bhagwat is participating, has been suspended.