நேபாள வெள்ளம்! 1,400-க்கும் அதிகமானோரைக் காணவில்லை! இந்தியர்களின் நிலை என்ன?

Wait 5 sec.

நேபாள வெள்ளத்தில் சிக்கிய 1,400-க்கும் அதிகமானோரைக் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.திபெத்தின் பனிப்பாறைகள் உடைந்ததால், நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தின் போடே கோஷி ஆற்றில், கடந்த புதன்கிழமை (ஆக. 26) திடீரென பெரு வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில், அங்குள்ள பாலங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் அடித்துச் செல்லப்பட்டன.நேபாளத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டு மீட்புப் பணிகள் மேற்கொள்ள காரணமான இந்தப் பேரிடரில் சிக்கிய இந்தியர்கள் உள்பட 30-க்கும் அதிகமான வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களையும் காணவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.இந்த நிலையில், நேபாள வெள்ளத்தில் சிக்கி 360 பேர் பலியானதாகவும், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 1,300 ஆக அதிகரித்துள்ளதாகவும், நேபாள காவல்துறையினர் இன்று (ஆக. 27) அறிவித்துள்ளனர்.இதையடுத்து, நேபாளத்தின் 14,000-க்கும் அதிகமான பாதுகாப்புப் படை வீரர்கள் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை மேற்கொள்ளவும் களமிறக்கப்பட்டுள்ளதாக, நேபாள பிரதமர் பாலேந்திர ஷா தெரிவித்துள்ளார்.இத்துடன், இன்று இரவு 8 மணி நிலவரப்படி நேபாளம் சென்ற சுமார் 290 இந்தியர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இதில், தமிழகம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளையும் காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.நேபாள வெள்ளத்தில் 288 இந்தியர்கள் மாயம்: மத்திய வெளியுறவுத்துறை அதிகாரபூர்வ தகவல்!It has been reported that the number of people missing after being caught in the floods in Nepal has risen to 1,400.