இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் பதவி வகிக்க வேண்டும் என சி-வோட்டர் கருத்துக் கணிப்பில் தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் மூன்றாம் இடம்பிடித்துள்ளார். தமிழ்நாட்டில், தவெக அரசு அமைந்து 3 மாதங்கள் மட்டுமே நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த பிரதமருக்கான பட்டியலில் முதல்வர் விஜய்யின் பெயர் இடம்பிடித்துள்ளது கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.சி-வோட்டர் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி (8.5%) மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் (6.9%) ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி முதல்வர் விஜய் 9.2% ஆதரவைப் பெற்றுள்ளார். இத்துடன், இந்தக் கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 48.7% பேர் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடிக்கும், 27.1% பேர் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்கள் யாரும் பிரதமராகப் பதவி வகிக்காதது நீண்டகால அரசியல் பேச்சாக இருக்கும் சூழலில், பட்டியலில் முதல்வர் விஜய்யின் பெயர் முன்னணியில் இடம்பெற்றுள்ளது கவனம் ஈர்த்து வருகிறது. முன்னதாக, ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 25 வரையிலான காலத்தில், சி வோட்டர் நிறுவனம் 25,184 பேரிடம் நேரடியாக நடத்திய கருத்துக் கணிப்புகள் மற்றும் கடந்த 6 மாதங்களில் சேகரிக்கப்பட்ட 91,795 நேர்காணல்களின் தரவுகள் மூலம் இந்த முடிவுகள் எட்டப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.அமைச்சர்களின் பதிலுரை இல்லாமலேயே நிறைவடைந்த சட்டப்பேரவை!A C-Voter opinion poll indicates that TN CM Vijay has secured third place regarding who should become India's next Prime Minister.