வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழாவை ஒட்டி இன்று (ஆக.27) முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இன்று (ஆக. 27) முதல் செப். 10 ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு இந்த ஆண்டும் பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், மூலமாக சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ஆகிய ஊர்களிலிருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வேளாங்கண்ணி மாதா கோவியில் நாளை (ஆக. 29) மறுநாள் கொடியேறுவதை முன்னிட்டு நாளை சென்னையிலிருந்து வேளாங்கண்ணிக்கு 150 சிறப்பு பேருந்துகளும், ஆக. 29 ஆம் தேதி ளாங்கண்ணியிலிந்து சென்னைக்கு 150 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. அதே போன்று செப். 8 ஆம் தேதி கொடி இறங்குவதை முன்னிட்டு சென்னையிலிருந்து வேளாங்கண்ணிக்கும் வேளாங்கண்ணியில் இருந்து சென்னைக்கும் 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மற்ற நாள்களில் பயணிகளின் தேவைக்கேற்ப சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்கும் வேளாங்கண்ணியிலிருந்து சென்னைக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். வசதிக்காக தொலைதூரங்களில் இருந்து இயக்கப்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் www.tnstc.in மற்றும் tnstc official செயலி மூலம் முன்பதிவு செய்து வேளாங்கண்ணி செல்லவும், அங்கிருந்து பயணிகள் திரும்பும் வகையில் பயணம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.இதுமட்டுமின்றி குழுவாக பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலும் பேருந்து இயக்கப்படுகின்றன.Special buses will be operated starting today (August 27) in connection with the Velankanni Matha Church festival.