அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், ஊழியர்கள் முற்றுகைப் போராட்டம்!

Wait 5 sec.

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊழியர்கள், ஓய்வூதியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் செவ்வாய்க்கிழமை காலை பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.கடந்த 2 ஆண்டுகளாக ஓய்வு பெற்ற 400 -க்கும் மேற்பட்ட பேராசிரியர், ஊழியர்களுக்கு, ஓய்வூதியம் மற்றும் தொகுப்பு ஊழியர்கள் மற்றும் தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம், பேராசிரியர், ஊழியர்களுக்கு பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற தவறிய பல்கலைக்கழக ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் அறிவுடை நம்பி, பதிவாளர் சிங்காரவேல் ஆகியோர் பதவி விலக கோரி பேராசிரியர்கள், ஊழியர்கள் நேற்று காலை 5 -வது நாளாக பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டு நடவடிக்கை குழு இணை ஒருங்கிணைப்பாளர் ரவி, முன்னாள் ஊழியர் சங்க தலைவர்கள் மதியழகன், மனோகரன், பேராசிரியர் முத்து வேலாயுதம் உள்ளிட்ட பலர் போராட்டத்தை விளக்கி பேசினார்கள்.நூற்றுக்கணக்கான பேராசிரியர்கள், ஊழியர்கள், ஓய்வூதியர்கள், தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். Professors and staff stage a siege protest at Annamalai Universit