கரூர் மாநகராட்சிக்கு அதிக சொத்து வரி நிலுவை வைத்திருப்போர் பட்டியலில் மாவட்ட திமுக அலுவலகம் இரண்டாமிடம் பிடித்துள்ளது.கரூர் மாநகராட்சியின் முதன்மை வரி வருவாயாக சொத்து வரி இருந்து வருகிறது. இதனை வைத்தே குப்பை அகற்றுதல், சாலை பராமரிப்பு, தெரு விளக்குகள், பூங்கா, நோய்த் தடுப்பு, பொது சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், மாநகராட்சியின் 1 முதல் 48 வரையிலான வார்டுகளில் வரி வசூல் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில், மாநகராட்சிக்கு அதிகளவில் சொத்து வரி நிலுவை வைத்திருப்போரின் 100 பேர் பட்டியலை கரூர் மாநகராட்சியின் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.பட்டியலின்படி, 33-வது வார்டில் கரூர் திண்டுக்கல் சாலையில் உள்ள ராமசாமி - நாராயணசாமி ஆகியோர் ரூ. 36.48 லட்சம் வரி நிலுவை வைத்து முதலிடத்தில் உள்ளனர்.தொடர்ந்து, 30-வது வார்டில் கௌரிபுரம் விரிவாக்கத்தில் இருக்கும் திமுக மாவட்ட அலுவலகம் இரண்டாமிடத்தில் உள்ளது. திமுக அலுவலகம், 2008-ல் திறக்கப்பட்டபோது, சொத்து வரியாக ஆண்டுக்கு ரூ. 1.18 லட்சம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது, ஆண்டுக்கு ரூ. 2.36 லட்சம் செலுத்த வேண்டும்.இதன் மூலம், திமுகவின் கரூர் அலுவலகம் 2008 முதல் 2026 மார்ச் மாதம் வரையில் மொத்தம் ரூ. 28,33,698 சொத்து வரி நிலுவை வைத்துள்ளது.சட்டம் ஒழுங்கு பிரச்னை, காவல் மரணங்கள்: சட்டப்பேரவையில் கேள்வி எழுப்ப எதிர்க்கட்சி திட்டம்DMK fails to pay Rs 28.3 lakh in taxes to Karur Corporation