சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆக. 28) சவரனுக்கு ரூ. 600 குறைந்துள்ளது.தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 160 குறைந்தது. புதன்கிழமை தங்கத்தின் விலை மாற்றமின்றி இருந்த நிலையில் நேற்று சவரனுக்கு அதிரடியாக ரூ. 2,280 (காலை & மாலை) குறைந்தது.தங்கம் விலைதொடர்ந்து இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆக. 28, வெள்ளிக்கிழமை) சவரனுக்கு ரூ. 600 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,17,200-க்கும் கிராமுக்கு ரூ. 75 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,725-க்கும் விற்பனையாகிறது.தங்கம் விலை குறைந்து நகை பிரியர்களிடையே சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.வெள்ளி விலைவெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ. 5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 260-க்கும் ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2,60,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. Chennai gold and silver rate today aug 28