அமெரிக்காவில் நடைபெற்ற கிராண்ட் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை பிரக்ஞானந்தா பெற்றார்.உலகளவில் மிகவும் உயரிய செஸ் தொடர்களில் ஒன்றான கிராண்ட் செஸ் தொடரில் டாப் 10 கிராண்ட் மாஸ்டர்கள் மட்டுமே பங்கேற்பார்கள். இந்தத் தொடரின் இறுதிப்போட்டி, அமெரிக்காவின் செயிண்ட் லூயிஸ் நகரில் நடைபெற்றது. இந்த இறுதிப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தாவும் பங்கேற்றிருந்தார்.இறுதிப் போட்டியின் முதல் 2 கிளாசிக்கல் சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் கரானாவைவிட 9 - 3 என்ற புள்ளிகள் கணக்கில் பிரக்ஞானந்தா பின்தங்கியிருந்தார்.இருப்பினும், ராபிட் சுற்று ஆட்டங்களில் அமெரிக்க வீரர் கரானாவை எதிர்த்து, சிறப்பாக விளையாடி பிரக்ஞானந்தா முன்னிலை பெற்றார். இதனைத் தொடர்ந்து, பிளிட்ஸ் ஆட்டங்களை பிரக்ஞானந்தா டிரா செய்ததால், புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இறுதியாக, 15 - 13 என்ற கணக்கில் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன் மூலம் கிராண்ட் செஸ் டூர் தொடரில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பிரக்ஞானந்தா பெற்றார்.மேலும், சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பரிசுத்தொகையாக சுமார் ரூ.1.90 கோடி வழங்கப்பட்டது.ஐந்து முறை உலக கால்பந்து சாம்பியன் பிரேசிலை எதிர்கொள்ளும் இந்திய அணி!R Praggnanandhaa creates history becomes the first Indian player to win the Grand Chess Tour