தில்லி ஐஐடி வளாக கட்டடத்திலிருந்து குதித்து மாணவர் தற்கொலை

Wait 5 sec.

தில்லி ஐஐடி வளாகத்தில் உள்ள கட்டடத்திலிருந்து கீழே குதித்து மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்துகொண்டவர் 31 வயதான எம்.எஸ்சி இயற்பியல் மாணவர் என போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையின்படி, மாணவர் காலை 8 மணியளவில் ஐஐடி தில்லி வளாகத்தின் முதன்மை வாயில் வழியாக உள்ளே நுழைந்துள்ளார். பின்னர் விரிவுரை மண்டப வளாகத்திற்குச் சென்று லிஃப்ட் மூலமாக ஆறாவது மாடிக்குச் சென்றுள்ளார்.அங்கிருந்து கட்டடத்தின் முன்பகுதியில் இருந்து அவர் கீழே குதித்ததாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உடனடியாக அவர் வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கெனவே பலியாகிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.சம்பவ இடத்திலிருந்து தற்கொலைக் குறிப்பு எதுவும் மீட்கப்படவில்லை என்று கூறிய போலீஸ் அதிகாரி, மாணவரின் பாக்கெட்டில் இருந்த மொஃபல் கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்யப்படும் என்றார். முதற்கட்ட ஆய்வில், உயரத்தில் இருந்து கீழே விழுந்ததால் ஏற்பட்ட காயங்களைத் தவிர வேறு எந்தக் காயங்களும் உடம்பில் இல்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.விசாரணையின் ஒரு பகுதியாக மாணவரின் ஆலோசனைக் பதிவுகள் மற்றும் பிற தகவல்களை ஐஐடி நிர்வாகத்திடமிருந்து போலீஸார் சேகரித்து வருகின்றனர். மாணவர் இறப்பிற்கான சூழ்நிலைகள் குறித்தும் கிடைக்கப்பெற்ற தகவல்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. A 31-year-old M Sc Physics student at IIT Delhi died after allegedly jumping from a building on the campus on Saturday morning, police said.கோவையில் கல்லூரி மாணவர் கொலை விவகாரம்: மாணவர்களின் அறைகளில் போலீஸ் திடீர் சோதனை!