அட்டகாசமான வாய்ப்பு... இந்திய விமான நிலைய ஆணையத்தில் மேலாளர், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணி!

Wait 5 sec.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய விமான நிலைய ஆணையத்தில் 389 மேலாளர், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து செப்டம்பர் 7 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பொறியியல், நிதி, சட்டம், மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பட்டம் பெற்றவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இது குறித்த விவரம் வருமாறு:வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: 12/2026/CHQ/DR-CBTபணி: Junior Executiveமொத்த காலியிடங்கள்: 129துறைவாரியான காலியிடங்கள் விவரம்:பணி: Junior Executive (Finance)-36 பணி: Junior Executive (Law)-6 பணி: Junior Executive (Operations)-79பணி: Junior Executive (Survey & Cartography)-8சம்பளம்: மாதம் ரூ. 40,000 - 1,40,000தகுதி: நிதியியல் பிரிவில் எம்பிஏ, எல்எல்பி முடித்து பார்கவுன்சிலில் பதிவு செய்திருப்பவர்கள், பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ, பி.டெக், பி.ஆர்க், பி.எஸ்சி, சிஎப்ஏ, சிஏ, எம்.எஸ்சி முடித்தவர்கள் தங்களுக்கான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். பணி அனுபவம் தேவையில்லை என்பதால், புதிதாக பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 7.9.2026 தேதியின்படி 27-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம் பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 10 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும். பணி: Managerமொத்த காலியிடங்கள்: 260 துறைவாரியான காலியிடங்கள் விவரம்:பணி: Manager(Engg‐Civil)- 145 பணி: Manager(Engg‐Elect)- 16 பணி: Manager(Finance)- 34பணி: Manager (Information Technology)-5 Manager (Architecture)-4Manager (Law)-2 Manager (Fire Services)- 14 Manager (Operations)-28Manager (Commercial)-9Manager (Corporate Planning & Management Services)-1 Manager (Corporate Communications)-2 சம்பளம்: மாதம் ரூ.60,000 - 1,80,000தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல், தகவல் தொழில்நுட்பம், நிதி, கட்டடக்கலை, சட்டம், தீயணைப்புச் சேவை, செயல்பாடுகள் பிரிவுகளில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள், வணிகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இளநிலை, எம்பிஏ, எம்.எஸ்சி முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் சம்மந்தப்பட்ட துறைகளில் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 7.9.2026 தேதியின் படி 32-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி சலுகை வழங்கப்படும்.தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு, மருத்துவத் தகுதித் தேர்வுக்கு அழைக்கப்படுவர். அதனடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி, இடபுள்யுஎஸ் பிரிவினர்களுக்கு ரூ.1,000. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள், ஏர்போர்ட் அத்தாரிட்டி நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.விண்ணப்பிக்கும் முறை: www.aai.aero இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 7.9.2026எழுத்துத் தேர்வு நடை பெறும் இடம், தேதி குறித்த விவரங்கள் இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும்.விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்..Airports Authority of India invites applications from eligible candidates to apply ONLINE through AAI’s Website www.aai.aero for the following posts. No application through any other mode will be accepted. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி: டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!