பிளாக்பஸ்டர் வெற்றியை நோக்கி ரவி தேஜாவின் இருமுடி கட்டு!

Wait 5 sec.

நடிகர் ரவிதேஜா நடிப்பில் வெளியான இருமுடி கட்டு திரைப்படம் அசத்தலான வரவேற்பைப் பெற்று வருகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கிய திரைப்படம் இருமுடி கட்டு. இந்தப் படத்தில் நடிகர் ரவி தேஜா நாயகனாகவும் நாயகியாக பிரியங்கா பவானி ஷங்கரும் நடித்திருந்தனர். தன் மகளைப் போன்ற பிற குழந்தைகளையும் நினைக்கும் நாயகன் பெண்களுக்கு எதிரான வன்முறையை எப்படி தட்டிக் கேட்கிறார் என்பதாக திரைப்படத்தின் கதை உருவாகியிருந்தது. வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெரிய ஆதரவைப் பெற்று பிளாக்பஸ்டர் வெற்றியை நோக்கி நகர்ந்துள்ளது. ரவி தேஜாவுக்கு நீண்ட காலம் கழித்து வெற்றிப்படம் அமைந்துள்ளதால் அவரது ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும், படத்தில் நாயகனின் மகளாக நடித்த நடிகை பேபி நக்‌ஷத்திராவும் கவனம் ஈர்த்துள்ளார்.முக்கியமாக, இப்படத்தின் வெற்றிக்கு ஜிவி பிரகாஷ் குமாரின் இசையமைப்பும் காரணமாக அமைந்துள்ளது. இப்படத்தில் இடம்பெற்ற, வில்லாளி வீரனே பாடலுக்கு ரசிகர்கள் பலரும் திரையரங்குகளில் நடனமாடி கொண்டாடி வருகின்றனர். விரைவாகவே, இப்படம் ரூ. 100 கோடி வசூலை அடையும் எனத் தெரிகிறது. The movie Irumudi Kattu, starring actor Ravi Teja, is receiving a fantastic reception.