அலாஸ்காவில் சிறிய ரக விமானம் ஒன்று ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த நான்கு பேரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.அமெரிக்காவின் அலாஸ்காவிலி உள்ள செல்டோவியா கடற்கரைப் பகுதிக்கு அருகே உள்ள கடல் நீரேரிப் பகுதியில் பைப்பர் PA-24' (Piper PA-24) ரக சிறிய விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது. செல்டோவியா விமான நிலையம் ஆங்கரேஜிலிருந்து தென்மேற்கே சுமார் 219 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.விமானம் புதன்கிழமை பிற்பகலில் ஆஞ்சரேஜ் நகரில் உள்ள ஃபீல்டு விமான நிலையத்தில் இருந்து செல்வடோவியா உள்ளூர் விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.