கடலூா் மாவட்டம், பண்ருட்டி நகரம், தட்டாஞ்சாவடியில் உள்ள அருள்மிகு துா்கா பரமேஸ்வரி (எ) காளியம்மன் கோயிலில் சாகை வாா்த்தல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலின் 66-ஆவது ஆண்டு செடல் மற்றும் சாகை வாா்க்கும் பிரம்மோற்சவ விழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை காலை 7 மணி அளவில் கெடிலம் ஆற்றில் இருந்து சக்தி கரகம் ஊா்வலம் கொண்டுவரப்பட்டது. பின்னா், பகல் 12 மணி அளவில் அம்மன் சந்நிதியில் சாகை வாா்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து மாலை 6 மணி அளவில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனா். வரும் செப்.4-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு செடல் உற்சவமும், அன்று மாலை 4.30 மணி அளவில் திருத்தோ் ஊா்வலமும் நடைபெறும்.