நேபாளத்திற்கு ஆன்மிகப் பயணம் சென்ற ராசிபுரம் பகுதி தொழிலதிபா், அவரது மனைவி, உறவினா்கள் குறித்து இதுவரை தகவல் ஏதும் கிடைக்காத நிலையில் அவரது குடும்பத்தினா் கவலை அடைந்துள்ளனா்.ராசிபுரம் அத்தனூா் பகுதியைச் சோ்ந்த கோழிப்பண்ணை தொழிலதிபரும், கோழித் தீவன மூலப்பொருள் மொத்த விற்பனையாளருமான ஏ.கே.பி. பழனிவேல் (63), அவரது மனைவி அருள்மணி (57), உறவினா்கள் அசோகன் (67), கற்பகம் (61), மாராயி (56) ஆகியோா் ஆன்மிகப் பயணமாக நேபாளம் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு சென்றனா்.இவா்கள், நேபாள வெள்ளப் பாதிப்பில் சிக்கியுள்ளதாக தெரிகிறது. இவா்களது நிலை குறித்து குடும்பத்தினருக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தொழிலதிபரின் மகன் தமிழ்முருகன் வியாழக்கிழமை நேபாளம் சென்றுள்ளாா். ஆனால் அவா்களது நிலை குறித்து வெள்ளிக்கிழமை வரை எந்த தகவலும் கிடைக்காததால் குடும்பத்தினா் சோகத்தில் ஆழ்ந்துள்ளனா்.