காரியாபட்டி பகுதிகளில் ஆயுதங்களுடன் விடியோவை பதிவு செய்து, அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிட்ட 3 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். காரியபட்டி அருகேயுள்ள அச்சம்பட்டி முத்தாலம்மன் கோவில் கிழக்கு தெருவைச் சோ்ந்தவா்கள் முத்துராமன் (22), ராமச்சந்திரன் (23), ஆவியூா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் கருப்பசாமி (23). இவா்கள் மூவரும் ஆயுதங்களுடன் இருப்பது போன்ற விடியோவை பதிவு செய்து, அவற்றை சமூக வலைதளங்களில் பரப்பியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, காரியாபட்டி போலீஸாா் இவா்கள் மூவரையும் கைது செய்தனா். இந்த நிலையில், சமூக வலைதளங்களில் இதுபோன்ற ஆபத்தான ஆயுதங்களைக் காட்டி விடியோக்களை வெளியிட்டால் அவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் எச்சரித்தனா்.