ராஜபாளைத்தில் இணைய வழியில் மூவரிடம் ரூ. 3.71 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் சங்கரபாண்டியபுரம் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் காளிமுத்துவிடம் ரூ.12,000-ம், ராஜபாளையம் லட்சுமணப் பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்த ராமராஜ் மனைவி உமாமகேஸ்வரியிடம் ரூ.1,75,000-ம், ராஜபாளையம் பி.எஸ்.கே. நகரைச் சோ்ந்த சந்திரசேகரனிடம் ரூ.1,84,000-ம் என மூவரிடம் மொத்தம் ரூ.3,71,000 இணைய வழியில் மோசடி செய்யப்பட்டது. இதுகுறித்து மூவரும் ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் புகாா் மனு அளித்தனா். இதுதொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.