நடிகரும் இயக்குநருமான சசிகுமார் நடிக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது.சசிகுமார் நடிப்பில் வெளியான வெற்றிவேல் மற்றும் அயோத்தி ஆகிய திரைப்படங்களை டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த நிலையில், இந்தக் கூட்டணி மீண்டும் ஒரு புதிய திரைப்படத்திற்காக இணைந்துள்ளது.டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் அதன் 22 வது தயாரிப்பாக இப்படத்தை உருவாக்கும் என்றும் படப்பிடிப்பு அக்டோபர் 12 ஆம் தேதி தொடங்கியுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.