கதாநாயகனாக அறிமுகமாகும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்..! ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Wait 5 sec.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பான் இந்திய படமாக உருவாகியிருக்கும் இந்தப் படம் வரும் 2027ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது.ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு ’எல்லம்மா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை வேணு எலிடன்டி இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ருக்மணி வசந்த், பாக்யஸ்ரீ போர்ஸ், அனந்திகா சனில்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். கிராமிய கதையாக உருவாகி வரும் இந்தப் படம் மீது அதீத எதிர்பார்ப்பு உருவாகி வருகிறது.இசையமைப்பாளராக தமிழ், தெலுங்கில் என 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். 47 வயதாகும் தேவி ஸ்ரீ பிரசாத் முதல்முறையாக நாயகனாக நடிக்கிறார்.முன்னதாக படங்களில் பாடல்களில் சில காட்சிகளில் வந்து நடித்துவந்தார். கடைசியாக மிஸ்டர் பச்சன் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். A powerful story emerging from the roots of our land, ready to find its voice across the nation! #Yellamma ~ Grand Worldwide Theatrical Release on MARCH 5th, 2027! ❤️‍In Telugu, Tamil, Hindi, Kannada & Malayalam.#YellammaFromMarch5th Rockstar @ThisIsDSP… pic.twitter.com/Zrf2us1poj— Sri Venkateswara Creations (@SVC_official) October 20, 2026தற்பெருமைக்காக கொலை செய்வதா? டைகர் ஷெராஃப் தாக்குதல் பற்றி ஆர்ஜிவி கருத்து! Music composer devi sri prasad to make his debut as the protagonist..! Release date announced!