புதுதில்லி: புனேவைத் தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனம், வட்டி வருமானத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தையடுத்து, நிதியாண்டின் 2வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 29% அதிகரித்து ரூ. 6,367 கோடியாக இருப்பதாக இன்று அறிவித்தது.வங்கி அல்லாத இந்த நிதி நிறுவனம், கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ. 4,948 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்தது. அதே வேளையில், நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருமானம் ரூ. 19,992 கோடியிலிருந்து ரூ. 24,576 கோடியாக அதிகரித்துள்ளது.நிதியாண்டின் 2வது காலாண்டில் ரூ. 10,785 கோடியாக இருந்த நிகர வட்டி வருமானம், தற்போது 24 சதவீதம் உயர்ந்து ரூ. 13,335 கோடியாக அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் மொத்த செலவினம், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ. 13,388 கோடியாக இருந்த நிலையில், தற்போது ரூ. 16,042 கோடியாக உயர்ந்துள்ளது.நிறுவனத்தின் சொத்துத் தரம் மேம்பட்டுள்ள நிலையில் அதன் வாராக்கடன், கடந்த ஆண்டு 1.24 சதவீதமாக இருந்த நிலையிலிருந்து, நிதியாண்டு 2வது காலாண்டில் மொத்தக் கடன்களில் 1.06 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதே போல, நிகர வாராக்கடன் 0.6 சதவீதத்திலிருந்து 0.42 சதவீதமாகக் குறைந்துள்ளது.செப்டம்பர் 2025 நிலவரப்படி, நிர்வகிக்கப்படும் சொத்துக்கள் மதிப்பு ரூ. 4,62,261 கோடியிலிருந்து 26 சதவீதம் அதிகரித்து ரூ. 5,84,624 கோடியாக உள்ளது.Bajaj Finance Ltd on Monday reported a 29 per cent increase in consolidated net profit at Rs 6,367 crore.எஸ்எம்எல் மஹிந்திராவின் Q2 லாபம் 44% சரிவு!