நிகிலா விமலின் தூமகேது படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி!

Wait 5 sec.

நடிகை நிகிலா விமல் நடித்துள்ள தூமகேது படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் நெட்பிளிக்ஸில் வெளியாகவிருக்கிறது.வெற்றிவேல், கிடாரி படங்களின் மூலம் தமிழில் அறிமுகமான நிகிலா விமல் மாரி செல்வராஜின் வாழை திரைப்படத்தில் மிகவும் புகழ்பெற்றார்.குருவாயூர் அம்பலநடையில் படத்தின் வெற்றிக்குப் பிறகு நிகிலா விமல் பெரிதாக மலையாளத்தில் வெற்றி கிடைக்காமல் இருக்கிறார். ஹேப்பி ஹவர்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் உருவான தூமகேது படம் சுதி மாடிசன் இயக்கியுள்ளார். இந்தப் படம் கடந்த செப்.25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம் வரும் அக்.23ஆம் தேதி நெட்பிளிக்ஸில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடத்தில் வெளியாகவிருக்கிறது.இந்தப் படத்தில் சஜின் கோபு நாயகனாவும் நிகிலா விமல் நாயகியாகவும் நடித்துள்ளார்கள். இதில் ஷன் டாம் சாக்கோ, மஞ்சு பிள்ளை, கணபதி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் ரூ.165 கோடி மட்டுமே வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டைம் லூப் முறையில் உருவாகியுள்ள இந்தப் படம் ஓடிடியிலாவது கவனம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. View this post on Instagram கதாநாயகனாக அறிமுகமாகும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்..! ரிலீஸ் தேதி அறிவிப்பு!Dhoomakethu on OTT: Here's when Sajin Gopu-Nikhila Vimal film releases