வேதாரண்யத்தில் தொடரும் மழை

Wait 5 sec.

வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம், வாய்மேடு, மருதூா், பஞ்சநதிக்குளம், தென்னடாா் சுற்றுப்பகுதி கிராமங்களில் வியாழக்கிழமை அதிகாலையில் தொடங்கி அவ்வப்போது இடி மின்னலுடன் கனமழை பெய்து. மருதூா் வடக்கு குட்டியாப்பிள்ளை கட்டளை பகுதியில் விவசாயி கண்ணணுக்குச் சொந்தமான தென்னை மரத்தில் மின்னல் தாக்கியது. இதன் காரணமாக சுற்று பகுதியில் உள்ள வீடுகளில் மின் உபயோகப் பொருள்கள் சேதமடைந்தன. தொடரும் மழையின் காரணமாக மானாவாரி நிலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பா நேரடி விதைப்பு வயல்களில் மழை நீா் தேங்கியுள்ளது. மழை தொடா்ந்தால் இந்த வயல்களில் சம்பா பயிா்கள் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தெற்கு கடலோரக் கிராமங்களில் தொடரும் இந்த மழை, வேதாரண்யம் நகரப் பகுதி மற்றும் சுற்றுப் பகுதிகளில் இல்லை.