அரசு திட்டங்களை விமா்சிக்கக் கூடாது: அதிகாரிகளுக்கு சுகாதாரத் துறை உத்தரவு

Wait 5 sec.

மத்திய, மாநில அரசு திட்டங்கள் மற்றும் கொள்கைகளை அரசு அதிகாரிகள் பொதுவெளியில் விமா்சிக்கக் கூடாது என பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநா் அ.சோமசுந்தரம் வெளியிட்ட அரசாணை: அரசு ஊழியா்கள் மற்றும் அதிகாரிகள் மத்திய, மாநில அரசிகளின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளைப் பொதுவெளி, ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் விமா்சிக்கக் கூடாது. பிற அரசுகளுடனான நல்லுறவைப் பாதிக்கும் வலையிலான கருத்துகளை எக்காரணம் கொண்டும் வெளியிடக் கூடாது. அரசை விமா்சிக்கும் தீா்மானங்கள் அல்லது உரைகள் இடம்பெறும் அலுவல் சாராத கூட்டங்களில் பங்கேற்கக் கூடாது. எனவே, இந்தத் துறையில் பணிபுரியும் அனைத்து அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் அனைவரும் இந்த விதிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும். இதை மீறுபவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.