மயங்கி விழுந்த விடுதிகாப்பாளா் உயிரிழப்பு

Wait 5 sec.

தேனி மாவட்டம், பெரியகுளம் அரசு பிற்படுத்தப்பட்டோா் விடுதி காப்பாளா் வியாழக்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா். பெரியகுளம் சோத்துப்பாறை அணை பகுதியில் பிற்படுத்தப்பட்ட பள்ளி மாணவா்களுக்கான விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் காப்பாளராக பெரியகுளம் தென்கரையைச் சோ்ந்த வேல்முருகன் (54) பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், இவா் வியாழக்கிழமை பணியில் இருந்த போது, தேனி மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் ஆா். சுரேஷ்குமாா் இந்த விடுதியை ஆய்வு செய்தாா். அப்போது, வேல்முருகன் திடீரென மயங்கி கீழே விழுந்தாராம். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.