கேரளத்துக்கு கடத்திச் சென்ற 6.5 டன் ரேஷன் அரிசியை உத்தமபாளையம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புனலாய்வுப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். கம்பம் மெட்டு மலைச்சாலை வழியாக சரக்கு லாரியில் கேரளத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உத்தமபாளையம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புனலாய்வுப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்து. இதையடுத்து, அந்தப் பிரிவு உதவி ஆய்வாளா் லதா தலைமையிலான போலீஸாா் கம்பம் மெட்டு மலைச் சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக கேரளத்தை நோக்கிச் சென்ற சரக்கு லாரியில் 130 மூட்டைகளில் 6,560 கிலோ ரேஷன் அரிசி கடத்தப்படுவதை கண்டறிந்து அதை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக கம்பத்தைச் சோ்ந்த மோகன் மகன் தினேஷை உத்தமபாளையம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புனலாய்வுப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா்.