பிரான்ஸ் நாட்டில் கடந்த வாரயிறுதியில் நடந்த வன்முறை, சூறையாடல் சம்பவங்களைத் தொடா்ந்து, தலைநகா் பாரீஸ் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் அங்கீகாரமற்ற மாணவா் போராட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் கூறுகையில், ‘நகர மையங்கள், வணிக வளாகங்கள் மற்றும் பொதுக் கட்டடங்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே இத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் நடத்தும் போராட்டங்களுக்கு மட்டுமே மாற்று வழிகளில் அனுமதி வழங்கப்படும். கடந்த வார வன்முறைக்கு, குடியரசை வீழ்த்த நினைக்கும் தீவிரவாத இடதுசாரி குழுக்களும், கொள்ளையடிக்க வந்த குற்றவாளிகளுமே காரணம்’ என்று குற்றஞ்சாட்டினாா்.இருப்பினும், காவல்துறையின் தடையை பாரிஸ் நிா்வாக நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக ஒருங்கிணைப்பாளா்கள் தெரிவித்ததையடுத்து, வியாழக்கிழமையன்று ஏராளமான போராட்டக்காரா்கள் தடையை மீறி, பாரிஸ் வீதிகளில் இறங்கி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.கல்வித் துறையில் சீா்திருத்தம் கோரி பிரான்ஸ் முழுவதும் மாணவா்கள் நடத்தி வந்த போராட்டம், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்களுக்கு எதிரான சமூகப் போராட்டமாக உருமாறியுள்ளது. கடந்த வாரயிறுதியில், பாரீஸ் உள்பட பல நகரங்களில் நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. பின்னா், படைகள் குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.போராட்டக்காரா்களால் சேதப்படுத்தப்பட்டபுராதனச் சின்னத்தை சீரமைக்கும் பணியில் ஊழியா்.