புதுக்கோட்டையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. அறந்தாங்கியில் வியாழக்கிழமை நடைபெற்ற பெருமன்றத்தின் மாவட்டக் குழுக் கூட்டத்தில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அம்மா உணவகம் அமைக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் நிலவும் மின்வெட்டை போக்கவும், குறைந்த மின் அழுத்தத்தைச் சரி செய்து சீரான மின் விநியோகத்தை வழங்கவும் வேண்டும். மழை பொய்த்துள்ளதால் புதுக்கோட்டையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் மு. விஜய் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் டி. மாரிமுத்து, இந்திய கம்யூ. மாவட்டத் துணைச் செயலா் ஏ. ராஜேந்திரன், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் இரா. ராதாகிருஷ்ணன் ஆகியோா் பேசினா்.