நடிகர் டைகர் ஷ்ராஃப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட விவகாரத்துல் மேலும் 2 பேர் இன்று (அக். 21) கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் இந்த விவகாரத்தில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பாலிவுட் நடிகர் டைகர் ஷ்ராஃப், அக். 18 ஆம் தேதி இரவு மும்பை ஜூஹூவில் உள்ள புஷ்பா பூங்காவில் கால்பந்து விளையாடிவிட்டு காரில் திரும்பியபோது, இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் டைகர் ஷ்ராஃப் காயங்களுடன் உயிர்த் தப்பிய நிலையில் அவரின் கார் ஓட்டுநர் மீது தோட்டா பாய்ந்தது. மேலும், அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநருக்கும் காயம் ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரில் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட நிலையில், அவர்களை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல் துறையினர் தேடிப் பிடித்து கைது செய்தனர்.இதுமட்டுமின்றி டைகர் ஷ்ராஃப் மீதான தாக்குதலுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றது. இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், அக்குழுவைச் சேர்ந்த ஒருவரை குஜராத்தில் காவல் துறை கைது செய்தது.மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக சமீர் மற்றும் ஜதின் ஆகிய இருவரை மும்பை காவல் துறை கைது செய்தது. முன்னதாக இரண்டு பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஜதின், துப்பாக்கிச்சூடு நடத்திய மூவருடன் ஒரே அறையில் தங்கியிருந்தவர் என காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும், தங்கியிருந்த இடங்கள், விடுதிகள், அவர்களுக்கு ஏற்பாடுகள் செய்து கொடுத்தவர்கள் என காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீதிமன்றக் காவலில் இருந்த சிஜேபி தலைவர்கள் அசுதோஷ், சௌரவ் விடுதலை!Actor Tiger Shroff Shooting Case 2 more people arrested 10 people so far