தலைவர் நிரந்தரம்... ஜெயிலர் - 2 திரைப்படத்திற்காக சஞ்சு சாம்சன் செய்த செயல்!

Wait 5 sec.

ஜெயிலர் - 2 திரைப்படத்திற்காக இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் காட்டிய ஆர்வம் பலரையும் வியக்க வைத்துள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவான ஜெயிலர் 2 திரைப்படம் அக்.15ல் உலகம் முழுவதும் வெளியானது. முதல் நாளில் இருந்தே நல்ல விமர்சனங்களும் பாராட்டுகளும் கிடைத்ததால் இப்படத்திற்குத் திரைகளும் காட்சிகளும் அதிகரித்தன. மேலும், சில மணிநேரங்களில் லட்சக் கணக்கான டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்ட சாதனையும் நிகழ்ந்தது. ஆச்சரியமாக, ஜெயிலர் - 2 திரைப்படம் 4 நாளில் உலக அளவில் ரூ. 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பிளாக்பஸ்டர் வெற்றியை நோக்கி நகர்ந்துள்ளது. இதனால், குறுகிய நாள்களிலேயே இந்தச் சாதனையைச் செய்த முதல் தமிழ்த் திரைப்படம் என்கிற பெயரையும் ஜெயிலர் - 2 பெற்றுள்ளது.இந்த நிலையில், பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் ஜெயிலர் - 2 திரைப்படத்தைக் காண ஒரு திரையரங்கத்தையே முன்பதிவு செய்துள்ளார். இதில், தன் மனைவி, சக கிரிக்கெட் வீரர்கள், நண்பர்களுடன் ஜெயிலர் - 2 திரைப்படத்தைக் காண்கிறார். மேலும், தமிழ் சினிமாவை புரிந்துகொள்ளக் கூடிய இந்திய கிரிக்கெட் அணியின் அதிகாரிகள் மற்றும் துணை பயிற்சியாளர்களும் இப்படத்தைக் காண உள்ளதாகக் கூறியுள்ளார். நடிகர் ரஜினியின் திரைப்படங்களை முதல் நாளே பார்த்துவிடும் அளவிற்கு சஞ்சு சாம்சன் தீவிர ரசிகர் ஆவார். இப்படத்தைப் பார்க்க கொஞ்சம் தாமதமாகிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.ராமாயணாவில் குறைகளைத் தேடாதீர்கள்: யஷ்Indian cricketer Sanju Samson's enthusiasm for the movie Jailer 2 has surprised many.