20.10.1976: ஆந்திராவில் ராக்கெட் நிலையத்தில் வெள்ளம் புகுந்தது

Wait 5 sec.

நெல்லூர், அக். 19 - நெல்லூர் ஜில்லாவில் கடந்த மூன்று தினங்களாக கனத்த மழை பெய்து கொண்டிருக்கிறது. காளிங்கி ஆற்றின் வெள்ளத் தண்ணீர் சூலூர்பேட்டையிலும், ஸ்ரீஹரிகோட்டை ராக்கெட் நிலையத்திலும் புகுந்ததாக கூறப்பட்டது. அநேக குடிசைகள் சரிந்து விழுந்தன, அல்லது அடித்துச் செல்லப்பட்டன என்று இங்கு தகவல் கிடைத்திருக்கிறது.கூடூர் தாலூகாவில் 3 குளங்களிலும், சூலூர்பேட்டை தாலூகாலில் 6 குளங்களிலும் உடைப்புகள் ஏற்பட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது.நெடுஞ்சாலையிலும், வெங்கடகிரி பக்கத்தில் உள்ள சாலைகளிலும் அரிப்புகள் ஏற்பட்டிருப்பதால் எல்லா பக்கங்களிலும் போக்குவரத்து தொடர்பு துண்டிக்கப்பட்டது.பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கலெக்டரும், போலீஸ் சூப்பிரண்டெண்டும், இதர அதிகாரிகளும் சகல நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைளும், நிவாரணப் பணிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.புழலேரி நிரம்புகிறதுசென்னை, அக். 19 - சென்னை நகருக்குக் குடிநீர் சப்ளை செய்யும் புழலேரி நிரம்பி வருகிறது. தற்போது இந்த ஏரியில் நீர்மட்டம் 46 அடியாக உள்ளது. முழுஅளவு 47.9 அடி. பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து சோழவரம் வழியாக புழலேரிக்குக் கணிசமான அளவு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. மேலும் பருவ மழை பெய்யக்கூடுமாதலால் மாத இறுதிக்குள் புழலேரி, பூண்டி, சோழவரம் ஏரிகளும் முழு அளவுக்கு நிரம்பிவிடக்கூடும்.புழலேரியில் தற்போதுள்ள அளவைக்கொண்டு, தற்போதுள்ள விகிதத்தில் அடுத்த ஏப்ரல்-மே மாதம் வரையில் குடிநீர் சப்ளை செய்ய முடியும் என்று தெரிகிறது.இன்று புழவேரி நீர்மட்டம் காலை 46 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து இரு தினங்களுக்கு இந்த ஏரிக்கு தண்ணீர் வந்து விழுந்துகொண்டிருக்கலாம்.20.10.1976: Flood in Andhra Pradesh rocket station19.10.1976: சூலூர்பேட்டை அருகில் ஒரு கிராமம் பூராவும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது