சென்னை பெருநகர் மற்றும் புறநகரின் ஓரிரு இடங்களில், இன்று மிகக் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று சென்னைக்கு மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை தெரிவித்துள்ளது. அதோடு, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. 12 மாவட்டங்களில் இன்று கனமழைராணிப்பேட்டை, காஞ்சிபுரம். கள்ளக்குறிச்சி, திருச்சி. அரியலூர் மாவட்டங்களிலும், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாளை 6 மாவட்டங்களில் கனமழைதஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது. அக்.22ல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்தூத்துக்குடி, நெல்லை. குமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அக்.22ல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.