ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா மேலும் இரு பதக்கங்களை வென்றுள்ளது. மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான 5-ஆவது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் அயிச்சி நகோயாவில் அக். 18 அன்று தொடங்கின.வரும் அக். 24-ஆம் தேதி நிறைவடையும் இந்தத் தொடரில் 45 நாடுகளைச் சேர்ந்த 3,000 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.மனிஷ் நர்வால் - வெள்ளிஇதில், துப்பாக்கி சுடுதலில் ஆண்களுக்கான 10மீ ஏர் பிஸ்டல் SH1 போட்டியில் இந்தியாவின் மனிஷ் நர்வால் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.இதன்மூலம், 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்கான தனது இடத்தை உறுதி செய்துள்ளார்.ஹரியானாவின் ஃபரிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த அர்ஜுனா விருது பெற்ற வீரரான மனிஷ் நர்வால், 8 பேர் கொண்ட இறுதிப் போட்டியில் 233.7 புள்ளிகள் பெற்று, இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.ஸ்ரிஷ்டி அரோரா - வெண்கலம்அதேபோல, துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10மீ ஏர் பிஸ்டல் SH1 போட்டியில் இந்தியாவின் ஸ்ரிஷ்டி அரோரா வெண்கலம் வென்றுள்ளார்.8 பேர் கொண்ட இறுதிப் போட்டியில் 214.7 புள்ளிகள் பெற்ற ஸ்ரிஷ்டி மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.துப்பாக்கி சுடுதலில் 4 பதக்கங்கள்இதனைத் தொடர்ந்து, ஆசிய பாரா விளையாட்டில் துப்பாக்கி சுடுதலில் இந்தியா 4 பதக்கங்களைப் பெற்றுள்ளது.நேற்று (அக். 19) நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் SH1 பிரிவில் இந்தியா முதல் இரண்டு இடங்களைப் பிடித்தது. இதில், மோனா அகர்வால் தங்கப் பதக்கமும், அவனி லெகாரா வெள்ளிப் பதக்கமும் வென்று சாதனை படைத்தனர். SH1 பிரிவு என்றால் என்ன?SH1 பிரிவு என்பது, கைகளின் கீழ் அல்லது மேல் மூட்டுகளில் குறைபாடுள்ள மற்றும் உதவியின்றித் தங்கள் துப்பாக்கியைப் பிடிக்கக்கூடிய மாற்றுத்திறனாளித் துப்பாக்கிச் சுடும் வீரர்களுக்கானது. இந்தப் பிரிவில் பங்கேற்கும் வீரர்களுக்குத் தங்கள் துப்பாக்கியின் எடையைத் தாங்குவதற்கான தனி ஸ்டாண்ட் தேவையில்லை.ஆசிய பாரா விளையாட்டு: பளு தூக்குதலில் இந்தியாவின் அசோக் வெள்ளி வென்றார்!Asian Para Games: India wins two more medals in shooting!