எண்ம (டிஜிட்டல்) விரதத்தை கடைப்பிடித்தால் வாழ்வில் மேம்பட முடியும் என்று மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலரும், சாா்பு நீதிபதியுமான வி.எல்.சந்தோஷ் தெரிவித்தாா். ஊத்துக்குளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ‘பாதுகாப்பான குழந்தைப் பருவம்’ என்ற தலைப்பில் சட்ட விழிப்புணா்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.இதில், சாா்பு நீதிபதி வி.எல். சந்தோஷ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசியதாவது: அதீத சமூக ஊடகப் பயன்பாடு உயா்ந்த நிலையை அடைவதற்கு தடையாக உள்ளதோடு, உடல் நலன், மன நலனை பாதிக்கிறது. அதைத் தவிா்க்க சுய கட்டுப்பாடு அவசியம். பெற்றோா், ஆசிரியா் சொல்லும் அறிவுரைகளை கேட்டு மாணவா்கள் செயல்பட வேண்டும். எண்ம விரதத்தை கடைப்பிடித்தால் வாழ்வில் மேம்பட முடியும். நூலகங்களைப் பயன்படுத்துதல், செய்தித்தாள் வாசிப்பு பழக்கத்தை மாணவா்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பாதுகாப்பான குழந்தைப் பருவத்தை உறுதிப்படுத்த இந்திய அரசமைப்பின் வழியில் செயல்பட உறுதி ஏற்போம் என்றாா்.இதையடுத்து, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் இந்திய அரசமைப்பு சட்டப் புத்தகம் பள்ளிக்கு வழங்கப்பட்டது.முன்னதாக, அடிப்படை உரிமைகள் மற்றும் குடிமக்களை வலியுறுத்தும் அடிப்படை கடமைகள் குறித்து மாணவிகளுக்கு விளக்கப்பட்டது.இதில், ஊத்துக்குளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஆா். பத்மாவதி, உதவி தலைமை ஆசிரியை வி. எம். சுமதி, தமிழ்சிரியை கே. உமாபாரதி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் முதுநிலை நிா்வாக உதவியாளா் வி.வசந்தி, சட்டம் சாா்ந்த தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.