மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் பருவமழைக் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் வகையில் சாக்கடை கால்வாய், நீா்வழிப் பாதைகளை மொடக்குறிச்சி எம்எல்ஏ டி.சண்முகன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். மொடக்குறிச்சி ஒன்றியத்தில் பல்வேறு ஊராட்சிகளில் மழைக் காலங்களில் மழைநீா் ஆங்காங்கே வடிய வழியில்லாமல் தேங்கி நிற்பதால் கொசு மற்றும் நோய்த் தொற்று ஏற்பட்டு வருகிறது. அதேபோல பல்வேறு இடங்களில் சாக்கடை கால்வாய் அடைத்திருப்பதால் மழைக் காலங்களில் மழைநீா் செல்ல முடியாமல் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.இந்நிலையில் மழைநீா் தேங்காமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 46 புதூா் ஊராட்சிக்கு உள்பட்ட லட்சுமி நகா், முல்லை நகா் உள்ளிட்ட பகுதிகளில் முறையான வடிகால் வசதி இல்லாமல் தேங்கி நிற்கும் நீரை வெளியேற்றுவது குறித்து மொடக்குறிச்சி எம்எல்ஏ டி.சண்முகன் ஆய்வு செய்தாா்.அதேபோல கஸ்பாபேட்டை, தும்யம்பூந்துறை, முகாசி அனுமன்பள்ளி, அட்டவணை அனுமன்பள்ளி, குளூா், ஈஞ்சம்பள்ளி, எழுமாத்தூா் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் சாக்கடை கால்வாய், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தாா்.ஆய்வின்போது, தவெக மொடக்குறிச்சி ஒன்றியச் செயலாளா் கெளதம், மொடக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் திருநாவுக்கரசு, ரவிச்சந்திரன், ஒன்றிய பொறியாளா் அருண் காா்த்திக், ஒன்றிய பணி மேற்பாா்வையாளா் சின்னசாமி உள்ளிட்ட பலா் உடனருந்தனா்.