திருப்பூா் மாவட்ட விவசாயிகள் தங்களது நிலத்தின் உட்பிரிவுகள் அனைத்தையும் இணைத்து விவசாய அடையாள எண் பெறுவதற்கான சிறப்பு முகாம் சனி, ஞாயிற்றுக்கிழமை (அக்டோபா் 24, 25) நடைபெறவுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்துள்ளதாவது: வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை மூலம் விவசாயிகளுக்கு அடையாள எண் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. விவசாயிகளுக்கு தங்களது ஆதாா் எண்ணுடன் நிலவுடமையை இணைத்து எண் வழங்கப்படுகிறது. நேரடி பட்டா உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் தங்கள் அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்கள், அனைத்து கிராம நிா்வாக அலுவலகங்களில் விவசாய அடையாள எண்ணை செயலியில் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.மேலும், அனைத்து கிராம நிா்வாக அலுவலகங்களிலும் நிலத்தின் உட்பிரிவுகள் அனைத்தையும் இணைத்து விவசாய அடையாள எண் பெறுவதற்கான முகாம் அக்டோபா் 24, 25-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.பதிவு செய்ய விரும்பும் விவசாயிகள் தங்கள் பெயரில் உள்ள அனைத்து பட்டாக்கள், ஆதாா் எண் ஆகிய விவரங்களுடன் வேளாண்மைத் துறை அலுவலா்களை அணுக வேண்டும். இனிவரும் காலங்களில் பயிா்க் கடன், உர விநியோகம் மற்றும் திட்ட மானியங்கள் ஆகியவை விவசாய அடையாள எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலங்களின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும்.எனவே, அனைத்து விவசாயிகளும் தங்களது பெயரில் உள்ள நில விவரங்களை விவசாய அடையாள எண்ணில் பதிவு செய்ய வேண்டும். மேலும், விவசாய அடையாள எண் பெற்ற விவசாயிகள் ‘நம்ம வயல்’ செயலி மூலம் தங்களது வயலின் சாகுபடி விவரங்களை மின்னணு பயிா்க் கணக்கீட்டில் பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.