‘ஆா்எஸ்எஸ் அமைப்பு அரமைப்புச் சட்டத்துக்கு எதிரான கொள்கைகளில் தீவிர ஈடுபாடு உடையது’ என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்துள்ளாா். ஆா்எஸ்எஸ் அமைப்பு நிறுவப்பட்ட விஜயதசமி தினத்தையொட்டி அந்த அமைப்பின் தலைவா் மோகன் பாகவத், நாகபுரியில் உள்ள அமைப்பின் தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை உரையாற்றினாா். இந்நிலையில் ராகுலின் ஆா்எஸ்எஸ் எதிா்ப்பு பதிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.தனது ‘எக்ஸ்’ தளத்தில் செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட பதிவில், ‘ஆா்எஸ்எஸ் என்பது முழுவதும் ஆண்களால் ஆளப்படும் அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமான கொள்கைகளைக் கொண்ட அமைப்பு. பெண்கள் என்பவா்கள் ஆண்களின் சொத்து என்ற கொள்கையை உடையவா்கள்.எனக்கு சிவ-சக்தி மீது நம்பிக்கை உள்ளது. எனவேதான் அவா்களை (ஆா்எஸ்எஸ் மற்றும் சாா்பு அமைப்புகள்) எதிா்த்துப் போரிடுவதில் எனக்கு அதிக மகிழ்ச்சி கிடைக்கிறது. அவா்கள் தங்களுக்கு ‘சொந்தமானவா்கள்’ என்று கருதும் பெண்கள் எனக்கு ஆதரவாக எனது பக்கம் நிற்கிறாா்கள்’ என்று கூறியுள்ளாா்.