புதுடில்லி, அக். 20 - தமது கமிஷன் விசாரணையிலிருந்து முன்னாள் முதல் மந்திரி கருணாநிதியும் மற்ற ஆறு திராவிட முன்னேற்ற கழகத் தலைவர்களும் விலகியதற்கு அவர்கள் கூறிய காரணங்களுக்கும் அவர்களுடைய உண்மை நோக்கங்களுக்கும் சம்பந்தமில்லை யென்று நீதிபதி சர்க்காரியா இன்று முடிவு கூறினார்.சென்னையில் கமிஷன் விசாரணை செப்டம்பர் 20 ஆம் தேதி அன்று ஆரம்பமான போது, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் சமர்ப்பித்த 5 கோரிக்கைகளில் ஒன்றை மட்டும் நீதிபதி ஏற்றார். அதாவது, மற்ற சாட்சிகளை விசாரித்து விட்டு அதற்குப் பின்பு புலன் விசாரணை அதிகாரிகளை விசாரிக்கச் சம்மதித்தார். ஆனால் விசாரணைத் தேதியை ஒத்திவைப்பது உள்பட மற்ற கோரிக்கைகளை ஏற்கவில்லை. அதன் பின்பு, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் கமிஷன் விசாரணையிலிருந்து வாபஸாகிக் கொண்டார்கள்.மற்ற நான்கு கோரிக்கைகளையும் தாம் நிராகரித்தது ஏன் என்பதை விளக்கி, இப்போது நீதிபதி சர்க்காரியா ஓர் உத்தரவில் கூறியிருக்கிறார். "விசாரணைக்குத் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் திரும்பி வருவதையும் அவர்கள் திரும்பி வந்து உண்மை துலங்கச் செய்ய உதவுவதையும் நான் வரவேற்கிறேன். அவ்வாறு திரும்பிவர அவர்களுக்கு உரிமை உண்டு,'' என்று சர்க்காரியா கூறியுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் விசாரணைக்குத் திரும்புவார்கள் என்ற நம்பிக்கையைத் தெரிவித்து, எதிர்கால விசாரணைகளின் நோட்டீஸ்களையும் நிகழ்ச்சி நிரல்களையும் அவர்களுக்கு அனுப்பி வைக்கவும் உத்தரவிட்டார். ...காவிரி ஜல பகிர்வுக்கு ஆய்வு குழு - மத்திய அரசு நியமித்ததுபுது டில்லி, அக். 20 - பற்றாக்குறை ஆண்டுகளில் காவிரி நதி பாயும் மாநிலங்கள் இடையே அதன் ஜலத்தைப் பகிர்ந்து கொள்ளளும் முறை பற்றி ஆராயவும், இப்பொழுது உபரியாக உள்ள ஜலத்தின் அளவைக் கணக்கிடவும் 5 பேர் கொண்ட கமிட்டியை மத்திய அரசு நியமித்துள்ளது.அக்கமிட்டியின் தலைவர் மத்திய ஜல வசதி கமிஷன் அங்கத்தினர் ஈ. சி. சால்தானா. கமிட்டி தன் பணியை முடிக்க மூன்று மாத அவகாசமளிக்கப்பட்டுள்ளது.சமீபத்தில் மத்திய விவசாய, பாசன மந்திரி ஜகஜீவன்ராம் நடத்திய கூட்டத்தில் கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா இடையே ஏற்பட்ட உடன்பாட்டையடுத்து இந்தக் கமிட்டி நியமிக்கப்பட்டுள்ளது.கமிட்டியில் கர்நாடக, தமிழ்நாடு பிரதம எஞ்சினியர்களும், கேரள பாசன திட்ட ஆலோசகரும் இருப்பார்கள். மத்திய ஜலவசதி கமிஷன் டைரக்டர் எஸ்.பி. குப்தா அக் கமிட்டியின் செயலாளர். ...21.10.1976: Sarkaria on the withdrawal of DMK leaders from the investigation20.10.1976: ஆந்திராவில் ராக்கெட் நிலையத்தில் வெள்ளம் புகுந்தது