பாஜக மாடல் தவெக அரசு: சீமான்

Wait 5 sec.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா உள்பட 12 பேரை தவெக அரசு கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்த அரசியல் தலைவர்களுக்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, "சட்டப் போராட்டத்தில் வெற்றி. பாஜக மாடல் தவெக அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும்!தில்லியின் பாஜக அரசுபோல் தமிழக அரசால் பொய் வழக்கு புனையப்பட்டு அநீதியாகக் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் கார்த்திகா, இசை மதிவாணன் உள்ளிட்ட 12 பேரின் விடுதலைக்காகக் குரல் கொடுத்த அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தச் சட்டப் போராட்டத்தில் தோளோடு தோள் நின்ற அனைத்து அமைப்புகளின் வழக்கறிஞர்களுக்கும், ஜனநாயகத்தின் மீதும் நீதியின் மீதும் நம்பிக்கை கொண்டு ஆதரவளித்த அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தொடர்ந்து பாஜக மாடல் தவெக அரசுக்கு எதிரான உரிமைப் போராட்டங்கள் வெல்லட்டும்" என்று கூறியுள்ளார்.திருமாவளவனை முதல்வராக்க இபிஎஸ் உள்பட அனைவரும் முயற்சித்தோம்: டிடிவி தினகரன்NTK Leader Seeman alleges that TVK government is acting like the BJP in Delhi