ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!

Wait 5 sec.

அதி கனமழை எச்சரிக்கையையடுத்து மறுஅறிவிப்பு வரும் வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்துக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் உதகையில் இன்று நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் மண்சரிவுகள், சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களை மூட மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னேரு உத்தரவிட்டுள்ளார். மறு உத்தரவு வரும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீலகிரிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை குழுக்கள் அங்கு விரைந்துள்ளன. Red Alert: Tourist places in the Nilgiris closed: National Disaster Response Force rushedஉதகை செல்ல திட்டமிட்டிருக்கிறீர்களா? வேண்டாம்!