புதுதில்லி: வட்டி வருமானத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தை தொடர்ந்து, 2026 செப்டம்பர் உடன் முடிவடைந்த 2வது காலாண்டில், ஏயு ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் நிகர லாபம் 53% உயர்ந்து ரூ. 858 கோடியாக இருப்பதாக வங்கி இன்று அறிவித்தது.கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் வங்கி ரூ. 561 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது. கடந்த ஆண்டு, நிறுவனத்தின் மொத்த வருமானம் இதே காலகட்டத்தில் ரூ. 5,224 கோடியாக இருந்தது. மதிப்பாய்வுக்குட்பட்ட காலாண்டில் இது ரூ. 6,382 கோடியாக உயர்ந்துள்ளது.கடந்த ஆண்டின் 2வது காலாண்டில் ரூ.4,511 கோடியாக இருந்த வட்டி வருமானம், தற்போது ரூ.5,612 கோடியாக அதிகரித்துள்ளது.வங்கியின் நிகர வட்டி வருமானம், கடந்த 2025 செப்டம்பர் காலாண்டில் ரூ.2,144 கோடியாக இருந்த நிலையில், ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலாண்டில் இது ரூ.2,820 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் நிகர வட்டி வருமானம் 32 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.வங்கியின் சொத்து தரம் மேம்பட்டுள்ளது. கடந்த வருடம் 2.41 சதவீதமாக இருந்த மொத்த வாராக்கடன், 2026 செப்டம்பர் வரையான காலாண்டில் இது 1.99 சதவீதமாக உயர்ந்துள்ளது.வங்கியின் நிகர வாராக்கடன் அளவு 0.81 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது 0.88 சதவீதமாக இருந்தது.இருப்பினும், வங்கியின் மூலதனம் விகிதம் கடந்த செப்டம்பர் 2025 இறுதியில் 18.78 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 18.54 சதவீதமாகக் குறைந்துள்ளது.AU Small Finance Bank reported a 53 per cent surge in net profit.ஜேகே சிமென்ட் 2வது காலாண்டு லாபம் 6.3 சதவீதம் உயர்வு!