பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே பிடிஐக்கு அளித்த பேட்டியில், “ திரையரங்குகளில் நடிகைகள் ஆலியா பட் மற்றும் தீபிகா படுகோனுக்கு மட்டுமே வரவேற்பு இருக்கின்றன” எனக் கூறியுள்ளார். வேலூரில் பிறந்த நடிகை ராதிகா ஆப்தே தமிழில் ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் அறிமுகமானார். பின்னர், கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது, பெரும்பாலும் ஹிந்தி படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.வித்தியாசமான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகை ராதிகா ஆப்தே பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகள் வென்றுள்ளார். கடைசியாக லஸ்ட் ஸ்டோரிஸ் 3 இணையத் தொடரில் நடித்திருந்தார். தற்போது அக்கா என்ற இணையத்தொடரில் நடித்துள்ளார். இதில் இவருடன் நடிகை கீர்த்தி சுரேஷும் நாயகியாக நடித்துள்ளார். யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் இத்தொடரை அறிமுக இயக்குநர் தர்மராஜ் ஷெட்டி எழுதி, இயக்கியிருக்கிறார். இந்தத் தொடர் வரும் அக்.30ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக இருக்கிறது. இதனை முன்னிட்டு பிடிஐக்கு அளித்த பேட்டியில் நடிகை ராதிகா ஆப்தே பேசியிருப்பதாவது: நான் நடிக்கும் படங்கள் திரையரங்குகளில் வெளியாகிறதா அல்லது ஓடிடியில் வெளியாகிறதா என்பதைப் பார்த்து தேர்வு செய்வதில்லை. அதைக் குறித்து நான் கவலைப்படுவதும் இல்லை. அதில் பல்வேறு வணிகங்கள் இருக்கின்றன. ஏதோ ஒரு வழியில் படம் வெளியானால் போதுமென்று நான் நடிப்பேன். திரையரங்குகளில் வெற்றியடையும் படங்கள் எதுவென்று கணிக்க முடியவில்லை. நல்ல படங்களாக இருந்தாலும் நான் நாயகி நடித்தவை வசூலிக்காமல் போயிருக்கின்றன. நான் பொதுவாக ஆலியா பட்டோ அல்லது தீபிகா படுகோனோ கிடையாது. அவர்களுக்காவது திரையரங்குகளில் ஓபனிங் கிடைக்கிறதே என்பதுதான் ஆறுதலாக இருக்கிறது. நான் உங்களுடன் நேர்மையாக இருக்க விரும்புகிறேன். அதாவது ஆண்கள் மட்டுமே முக்கியமானதாக இருக்கிறார்கள். தற்போதைக்கு வன்முறை படங்கள் மட்டுமே வசூலித்து வருகின்றன. அதற்கு நான் முழுமையான எதிர் கருத்தை வைத்திருக்கிறேன். அதனால், இது சற்று இக்கட்டான சூழ்நிலை. அந்த மாதிரியான படங்களை நான் பார்ப்பதில்லை; அவை எல்லாம் அபத்தமாக இருப்பதாக நினைக்கிறேன்.பாப்கார்ன் சாப்பிட்டுக்கொண்டு எப்படி 50 ஆண்கள் அல்லது 50 பெண்கள் அடிவாங்குவதை பார்க்க முடிகிறது? படைப்பாற்றலுடன் அடி வாங்குகிறார்களா? கடந்த முறை பாத்திரம் கழுவும் தொட்டியில் உடைந்த மண்டை அடுத்த முறை கான்கிரீட் தளத்தில் உடையும். அதனால், அதில் நடிக்க விரும்பவில்லை என்றார்.40 ஆண்டுகளில் முதல்முறை... ரசிகர்களுடன் இணைந்து ஜெயிலர் 2 படம் பார்த்த ரஜினி!Only Alia Bhatt, Deepika Padukone can get theatrical opening: Radhika Apte